இருதரப்பினர் மோதல்; 4 பேர் கைது


இருதரப்பினர் மோதல்; 4 பேர் கைது
x

நெல்லை அருகே இருதரப்பினர் மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கங்கைகொண்டான் இத்திகுளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பலவேசம் (வயது 50). ஆட்டோ டிரைவர். இவருக்கும், மேட்டுபிராஞ்சேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் முருகன் (26) என்பவருக்கும் ஆட்டோவில் சவாரி ஏற்றுவதில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பலவேசத்திற்கு சொந்தமான இத்திகுளத்தில் உள்ள கடையை முருகன், அவரது ஆதரவாளர்களான அதே பகுதியை சேர்ந்த எட்டப்பன் (50), மகேஷ் (22) ஆகியோர் சேதப்படுத்தியதாகவும், முருகனின் ஆட்டோ கண்ணாடியை பலவேசம் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரிடம் மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் பலவேசம், முருகன், எட்டப்பன், மகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story