இருதரப்பினர் மோதல்; 9 பேர் கைது


இருதரப்பினர் மோதல்; 9 பேர் கைது
x

இருதரப்பினர் மோதல்; 9 பேர் கைது

நாகப்பட்டினம்

நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இருதரப்பினரிடையே மோதல்

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி கிராமத்தில் ஊர் வரவு-செலவு கணக்கு பார்ப்பதில் இருதரப்பு மீனவர்கள் இடையே நேற்றுமுன்தினம் மோதல் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கலவரத்தில் இருதரப்பினரை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கத்தி, கற்களால் தாக்கி கொண்டனர்.

இதி்ல் ஜெகநாதன், அவரது மனைவி கலைவாணி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தநிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி நாகூரில் ஒரு தரப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

29 பேர் மீது வழக்கு

இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரை சேர்ந்த 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருதரப்பை சேர்ந்த அருள்முருகன், அபிலேஷ், மணிகண்டன், ராஜேஷ், குமார், ராஜா, ராஜ்குமார், முத்தமிழன், முரளி ஆகிய 9 பேரை கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படு்த்தினர். பின்னர் அவர்கள் 9 பேரும் பொறையாறு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 20 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

போலீஸ் குவிப்பு

மேலும் மோதல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


Related Tags :
Next Story