இருதரப்பினர் மோதல்; 14 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்; 14 பேர் மீது வழக்கு
x

வள்ளியூரில் இருதரப்பினர் மோதிக் கொண்டது தொடர்பாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் ஊத்தடியில் நல்லமுத்தம்மன் கோவில் கொடைவிழா கடந்த 2 நாட்கள் முன்பு நடந்தது. இந்த கொடைவிழா கலைநிகழ்ச்சியின்போது, நடனம் ஆடியதில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மிக்கேல்ராஜ் மகன் மரியஜோதி (வயது 27) தரப்பினருக்கும், நாதன் மகன் பெருமாள் என்ற பெல்வின் (23) தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் கற்களால் அடித்தும், பாட்டிலால் குத்தியும் மோதிக்கொண்டனர். இதில் ஜோதி சரண், பெல்வின் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். பெல்வின் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது இருதரப்பையும் சேர்ந்த 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மிக்கேல்ராஜ் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story