இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இருதரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் ராமச்சந்திரன்(வயது 32). டிரைவரான இவர் சம்பவத்தன்று தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் ராஜா(27), பல்லகச்சேரி கருப்பன் மகன் தமிழ்ச்செல்வன்(27), மேட்டுக்குப்பம் கல்வராயன் மகன் ருத்திரன்(25) உள்ளிட்ட சிலர் மதியம் எங்களிடம் ஏன் பிரச்சனை செய்தாய் எனக் கூறி ராமச்சந்திரனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழ்செல்வன் தரப்பினரை ராமச்சந்திரன் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து இரு தரப்பினரும் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இரு தரப்பை சேர்ந்த ராஜா, தமிழ்ச்செல்வன், ருத்திரன் மற்றும் சுதாகர், சக்திவேல், ரஞ்சித்குமார் ஆகிய 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story