இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு
நடுவீரப்பட்டு அருகே இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 6 பேர் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டது.
கடலூர்
நெல்லிக்குப்பம்,
நடுவீரப்பட்டு அருகே உள்ள பெரியநரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 27). இவர், அதே பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழு தலைவி வளர்மதி என்பவரிடம் ரூ.75 ஆயிரம் வாங்கியதாக தெரிகிறது. அதன்பிறகு கண்ணதாசன் சரிவர குழு பணத்தை கட்டவில்லை. சம்பவத்தன்று வளா்மதி கண்ணதாசனை சந்தித்து பணத்தை கேட்டுள்ளார். இதனால் வளர்மதி தரப்பினருக்கும், கண்ணதாசன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் காயமடைந்த கண்ணதாசன், பழனிவேல் ஆகிய 2 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில் வளர்மதி, பழனிவேல், சந்துரு, சாரதி ஆகிய 4 பேர் மீதும், பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் கண்ணதாசன், காளிமுத்து ஆகிய 2 பேர் மீதும் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story