இருதரப்பினர் மோதல்; ஊராட்சி செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு
உளுந்தூர்பேட்டை அருகே இரு தரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பாக ஊராட்சி செயலாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே எல்லை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது சம்பந்தமாக ஊர் நாட்டாமைகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கோவில் கணக்குகளை கேட்டபோது அந்த ஊரை சேர்ந்த நாட்டாமைகளில் ஒருவரான ராமலிங்கம் தரப்பினருக்கும், தேன்குணம் ஊராட்சி செயலாளர் ஜெயகிருஷ்ணன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயகிருஷ்ணன் ராமலிங்கம் தரப்பினரை ஆபாசமாக திட்டி மிரட்டியதாகவும், இதே போல் ராமலிங்கம் தரப்பினர் ஜெயகிருஷ்ணன் தரப்பினரை மிரட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இரு தரப்பினரும் தனித்தனியாக எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒருவர்மீது ஒருவா் புகார் அளித்தனர். அதன் பேரில் இரு தரப்பினரை சேர்ந்த ஜெயகிருஷ்ணன், ராமலிங்கம், இவரது மகன் விஜய் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.