ரூ.1 கோடியே 68 லட்சம் உண்டியல் காணிக்கை
ரூ.1 கோடியே 68 லட்சம் உண்டியல் காணிக்கை இருந்தது.
ராமநாதபுரம்
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் திறந்து எண்ணப்பட்டது. இதில் கடந்த ஒரு மாத உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 68 லட்சம் ரொக்கமும், தங்கம் 136 கிராம் 100 மில்லி கிராமும், 6 கிலோ வெள்ளியும் மற்றும் 155 வெளிநாட்டு பணமும் இருந்தது.
கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்டியல் என்னும் பணியில் ராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன், மேலாளர்் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story