மாரண்டஅள்ளி பேரூராட்சியில் குப்பைகளை உரமாக்கும் திட்டத்துக்கு பூமிபூஜை
தர்மபுரி
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி பேரூராட்சி வள மீட்பு பூங்காவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்கு நவீன எந்திரத்தின் மூலம் குப்பைகளை உரமாக்கும் திட்டம் ரூ.48 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், செயல் அலுவலர் சித்திரை கனி, இளநிலை உதவியாளர் சபரி, கவுன்சிலர்கள் சத்யா சிவகுமார், வெங்கடேசன், கார்த்திகேயன், யதிந்தர், அபிராமி, ஒப்பந்ததாரர் ராஜேந்திரன் மற்றும் குழந்தை வேலு, மணிகண்டன், காந்தி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story