பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்து நெல்லை விற்பனை செய்யலாம்


பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்து நெல்லை விற்பனை செய்யலாம்
x

பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்து நெல்லை விற்பனை செய்யலாம்

திருவாரூர்

கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்து நெல்லை விற்பனை செய்யலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பயோமெட்ரிக் முறை

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்திற்காக மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளை தடுக்கும் வகையில் பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3-ம் கோடை பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்பனை செய்ய பதிவு செய்யும் போது, பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்து நெல்லை விற்பனை செய்யலாம்.

விரல் ரேகை பதிவு

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் நெல் வியாபாரிகள் உள்நுழையாமல் தடுப்பதுடன், விவசாயிகளின் நெல்லை மட்டும் காலதாமதமின்றி உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யமுடியும்.

பயோ மெட்ரிக் கருவியில் விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் கைபேசி எண்ணிற்கு ஓ.டி.பி. வரும். அதன் மூலம் விவசாயிகளின் விவரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயிகளின் சுயவிவரங்களை கொள்முதல் நிலையங்களில் சாிபார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story