பறவைகள் கணக்கெடுப்பு பணி60 வகையான இனங்கள் கண்டறியப்பட்டன


பறவைகள் கணக்கெடுப்பு பணி60 வகையான இனங்கள் கண்டறியப்பட்டன
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நடத்திய கணக்கெடுப்பில் 60 வகையான பறவைகள் கண்டறியப்பட்டன.

கடலூர்

பறவைகள் கணக்கெடுப்பு

தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் உத்தரவின்பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதி, மருதாடு, சிதம்பரம், பிச்சாவரம் மற்றும் விருத்தாசலம், திட்டக்குடி வெலிங்டன் ஏரி ஆகிய பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

இதில் கடலூர் வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது, வனவர் குணசேகரன், வனக்காப்பாளர் வருமன் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள், பண்ருட்டி அரசு பள்ளி சாரண மாணவர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

60 வகையான பறவைகள்

இந்த குழுவினர் பெயிண்ட்ஷார்க், பெலிகன், பிளாக் விங்கிடு ஷில்டு, வெஸ்டன் ரீப் கரேன், கிரே கரான், விம்பரல், யுரேசியன் கர்லியோ, மணல் கொத்தி, லிட்டர் கிரபே, ஓரியண்டல் டார்க்கர், நீர் காகம், கிரே காகம், பர்பில் கிரேம்கைன் போன்ற 60 வகையான பறவைகளை கண்டறிந்தனர்.

இதில் சில பறவைகள் இமயமலை, ஐரோப்பா போன்ற பகுதிகளில் குளிரை தாங்க முடியாமல் கடற்கரையோர பகுதிக்கு வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட சாரண மாணவர்களுக்கு சான்றிதழ்களை வனத்துறையினர் வழங்கினர்.


Next Story