203 பேருக்கு பிறப்பு சான்றிதழ்


203 பேருக்கு பிறப்பு சான்றிதழ்
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:45 PM GMT)

தேன்கனிக்கோட்டையில் 203 பேருக்கு பிறப்பு சான்றிதழ்களை ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பெட்டமுகிலாளம் ஊராட்சியில் சித்தாண்டபுரம், ஜெய்நகர், சித்திக் நகர், காமகிரி, பெட்டமுகிலாளம் உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் பல பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெறவில்லை. இதை அறிந்த கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் பழங்குடியின மக்களின் பிறந்த குழந்தைகள் முதல் மாணவ-மாணவிகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து முதற்கட்டமாக 203 குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் வழங்கும் விழா காமகிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர் சபரி வரவேற்று பேசினார். இதில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குழந்தைகள், மாணவ, மாணவிகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story