அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின்மாநில துணைத்தலைவர் கர்ணன் பிறந்தநாள்


அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின்மாநில துணைத்தலைவர் கர்ணன் பிறந்தநாள்
x
திருப்பூர்


திருப்பூரில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில துணைத்தலைவர்கர்ணன் பிறந்தநாள் விழாவையொட்டி அரசியல் முக்கிய பிரமுகர்கள்-கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

60-வது பிறந்தநாள் விழா

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில துணைத்தலைவரும், மத்திய குழு உறுப்பினருமான எஸ்.கர்ணனின் 60-வது பிறந்தநாள் விழா நேற்று திருப்பூரில் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கர்ணன் தலைமை தாங்கினார். அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு, 60-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 60 கிலோ கேக் வெட்டப்பட்டது.

இதேபோல் பிறந்தநாள் கொண்டாடிய கர்ணனுக்கு பணமாலை மற்றும் கிரீடம் சூட்டி கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். முன்னதாக விழாவுக்கு வந்த கர்ணனுக்கு மேள, தாளம் முழங்க, பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முடிவில் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி.கதிரவன், தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் திருப்பதி, மாநில செயலாளர் பசும்பொன், தேசிய செயலாளர்கள் சுரேஷ்தேவர், ஜெயராமன், முன்னாள் மத்திய குழு உறுப்பினர் திருப்பூர் ராஜசேகர், இளைஞரணி தேசிய செயலாளர் அசோக், மாநில செயலாளர் பாஸ்கர பாண்டியன், மதுரை செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் மணிகண்டன், மதுரை மாவட்ட கவுன்சிலர் ரெட்காசி, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் தேளி காளிமுத்து, மாநகர் மாவட்ட செயலாளர் மகேஷ்குமார், மாநகர தலைவர் மகாலிங்கம், புறநகர் தலைவர் தாமோதரன் உள்படபல்வேறு கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், அமைப்பு நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில, மாவட்ட, மாநகரநிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story