தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா


தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில்  ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
x

தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாநில செயலாளர் தேன்குஅன்வர் தலைமை தாங்கினார். நகர தலைவர் பால்ராஜ் வரவேற்றார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரகுமான், முன்னாள் நகர தலைவர் தாஸ், மாவட்ட துணை தலைவர் சபியுல்லா, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கேக்வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு பேனா, புத்தபை, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் முனியப்பா, ரங்கப்பா, முகமது. வெங்கடேஷ், ஜெயகுமார், சுரேஷ், நஞ்சுண்டன், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story