ராஜாஜி பிறந்த நாள் விழா
ஓசூர் அருகே தொரப்பள்ளியில் ராஜாஜி பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓசூர்
ராஜாஜியின் 144-வது பிறந்த நாள் ஓசூர் அருகே தொரப்பள்ளியில் அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது இல்லத்தில் உள்ள சிலைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களை பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.
அதேபோல், ராஜாஜியின் பிறந்த நாளையொட்டி அவரது சீடரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வெங்கடசாமி ராஜாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். விழாவில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் மோகன், தாசில்தார் கவாஸ்கர், ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, தொரப்பள்ளி ஊராட்சி தலைவர் சாந்தம்மா, ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.