திண்டுக்கல், வத்தலக்குண்டுவில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா


திண்டுக்கல், வத்தலக்குண்டுவில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
x

திண்டுக்கல், வத்தலக்குண்டுவில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா, திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதற்கு இளைஞர் அணி தலைவர் முகமதுஅலி தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் சிலை, ராஜீவ்காந்தி மற்றும் மூப்பனார் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் மச்சக்காளை, இளைஞர் அணி நிர்வாகிகள் நூர்சையது, அரவிந்த்சாமி, தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வத்தலக்குண்டுவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா, வட்டார தலைவர் காமாட்சி தலைமையில் நடைபெற்றது. அப்போது ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.





Next Story