அரிவாள் வடிவ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: அதிரடியாக கைது செய்த போலீசார்

அரிவாள் வடிவ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: அதிரடியாக கைது செய்த போலீசார்
x

திருவாரூரில் அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேருந்து நிறுத்தத்தில் வெட்டி கெத்து காட்டிய இளைஞர்களை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூரில் அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேருந்து நிறுத்தத்தில் வெட்டி கெத்து காட்டிய இளைஞர்களை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

நேற்று மாலை மாதவன் என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நண்பர்கள், அரிவாள் வடிவ கேக் தயாரித்து, அதை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பேரளம் பேருந்து நிறுத்தத்தில் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கேக் வெட்டி கெத்து காட்டிய அஜய் குமார், மணிகண்டன், விஷ்ணு, பிரசாத் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மாதவன் மற்றும் மோகன்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story