பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
தஞ்சையில் இந்து எழுச்சி பேரவை நிர்வாகி பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சையில் இந்து எழுச்சி பேரவை நிர்வாகி பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்து எழுச்சி பேரவை நிர்வாகி
தஞ்சையை அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சாய்ரகு(வயது 39). இந்து எழுச்சி பேரவையின் தஞ்சை மாநகர் மாவட்ட தலைவராக உள்ள இவர் தனது பிறந்த நாளை கடந்த 24-ந்தேதி கொண்டாடினார்.
தஞ்சை-நாகை சாலையில் உள்ள பேரவை அலுவலகத்தில் வைத்து நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அவர் பிறந்த நாளை கொண்டாடினார்.
பட்டா கத்தியால் கேக் வெட்டினார்
அப்போது இந்த எழுச்சி பேரவை நிர்வாகிகள் வழங்கிய பட்டா கத்தியால் சாய்ரகு கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். ஆட்டம், பாட்டத்துடன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
கைது-சிறையில் அடைப்பு
இதன் அடிப்படையில் தஞ்சை தாலுகா போலீசார், சாய்ரகு மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.