முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழா


முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழா
x

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு போல்டன்புரத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யு.சி. மாநில அமைப்புச் செயலாளருமான பெருமாள்சாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் பிரிவு தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் போல்டன்புரத்தில் உள்ள கக்கன் உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story