காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி

காமராஜர் பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரியில் காமராஜரின் பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியில் நடந்த விழாவுக்கு நகர தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார். டாக்டர் செல்லக்குமார் எம்.பி. காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், ஜேசு துரைராஜ், மாவட்ட துணைத்தலைவர் சேகர், காவேரிப்பட்டணம் நகர தலைவர் தேவநாராயணன், வட்டார தலைவர் கிருஷ்ணன், பிலால், சேவா தளம் தேவராஜ், கபீர், ராமன், கமலக்கண்ணன், ஹரி, பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் பி.எஸ்.அஜித் பாஷா, கிருஷ்ணகிரி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.சதாம் உசேன ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நகர தலைவர் தேவநாராயணன் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.அப்சல், மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, குட்டி என்கிற விஜயராஜ், அஜிஸ்சுல்லா, அகமது கபீர், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணி, தொழில் அதிபர் நந்தகுமார், மாவட்ட துணை தலைவர் ரகமத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு காமராஜரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் மாணவர்களுக்கு இனிப்புகள், நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, தினேஷ் குமார்,கணபதி, கோவிந்தராஜ் மற்றும் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஐடியல்ஸ் சையத் அக்பர் நன்றி கூறினார்.

ராயக்கோட்டை

ராயக்கோட்டை பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவர் ஹரிஸ்பாபு சம்பங்கி, ஜெ.கே.கோபால், சீபம் ராமமூர்த்தி, சக்கரலப்பா, வட்டார தலைவர் சுந்தர்ராஜ், பாண்டியன், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனில்குமார், மோகன்குமார், கேபிள் முரளி, கோவிந்தராஜ், கிருஷ்ணன், ரோஷன், நாகராஜ், ராமமூர்த்தி, மாதேவ், மல்லையன் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஓசூர்

ஓசூர் வட்டார நாடார் சங்கத்தின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் சங்க ஆலோசகர்கள் எஸ்.சென்னகிருஷ்ணன், எஸ்.கிருஷ்ணதாஸ், எஸ்.அரசகுமாரநாடார், துணை தலைவர்கள் எஸ்.ஜெயபால், ஏ.ஜேம்ஸ்துரை, ஆர்.நியுமென் இணைச்செயலாளர் எல். ஆறுமுகபெருமாள், கே.வடிவேல், ஏ.சாந்திவிநாயகம், பொருளாளர் பி.சுவாமிதாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் தலைவர் பி.ஏ.மணிவண்ணன் கலந்து கொண்டு காமராஜரின் பெருமைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் துவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் எஸ்.ஆர்.பதுவைராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story