காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

காமராஜர் பிறந்த நாள்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் அனைத்து பிரிவுகள் சார்பில் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் நகர தலைவர் பால்ராஜ், நிர்வாகி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். முடிவில் நகர முன்னாள் தலைவர் தாஸ் நன்றி கூறினார்.

கெலமங்கலம்

கெலமங்கலம் பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நகர தலைவர் வெங்கடேஷ் தலைமையில் மாநில ராகுல் காந்தி பேரவை தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் கவுன்சிலர் முனி கிருஷ்ணப்பா, நகர பொருளாளர் புருஷோத்தமன், ராமச்சந்திரபா மற்றும் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், காமராஜர் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடசாமி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் ஆகியோர் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர்.

விழாவையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பாட்டு, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story