தியாகி விஸ்வநாத தாஸ் பிறந்த தினம்


தியாகி விஸ்வநாத தாஸ் பிறந்த தினம்
x

தியாகி விஸ்வநாத தாஸ் பிறந்த தினம்

மதுரை

திருமங்கலத்தில் வாழ்ந்த சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ். இவர் நாடக நடிகராக இருந்து கொண்டு 1919 முதல் தனது மேடை பாடல் மூலமாக வெள்ளையர்களுக்கு எதிராக பாடல் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதற்காக அவர் 29 முறை ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது பிறந்த நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரின் 136-வது பிறந்த நாளையொட்டி திருமங்கலத்தில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திருமங்கலம் ஆர்.டி.ஓ. அபிநயா, தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், மக்கள் தொடர்பு அலுவலர், மருத்துவ அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மருத்துவ அமைப்பை சேர்ந்த சுப்பிரமணியன் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் சிதிலமடைந்து வரும் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தை பராமரிக்க வேண்டும். அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நினைவு இல்லத்தை திருமண மண்டபம் மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து விஸ்வநாததாஸ் பேத்தி அரசு வேலை வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார்.


Next Story