கருணாநிதி பிறந்த நாள் விழா


கருணாநிதி பிறந்த நாள் விழா
x

மகுடஞ்சாவடியில், தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி பங்கேற்பு

சேலம்

இளம்பிள்ளை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்ததுடன், பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள், உணவு வழங்கினார்.

இதில் துணைச்செயலாளர் சம்பத்குமார், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வம், வீரப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி திருநாவுக்கரசு, அ.புதூர் ராஜமாணிக்கம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் காக்காபாளையம் சரவணன், கீர்த்தனை டெக்ஸ் பச்சமுத்து, அய்யனார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல் தப்பகுட்டை ஊராட்சியில் அய்யனூர் மாரியம்மன் கோவில் அருகே கருணாநிதி பிறந்தநாள் விழா நடைபெற்றது. அய்யனூர் கோபி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் ஏற்பாட்டில் கட்சியின் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி கலந்துகொண்டு ஆயிரம் தென்னங்கன்றுகள் மற்றும் அன்னதானத்தையும் வழங்கினார். இதில் தப்பக்குட்டை ஊராட்சி பொறுப்பாளர் அய்யாவு, செல்வம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story