காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x

தர்மபுரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பல்வேறு கட்சியினர் அவரது சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பல்வேறு கட்சியினர் அவரது சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காமராஜர் பிறந்த நாள்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தர்மபுரி பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை தாங்கி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் மோகன், நகர தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சண்முகம், வட்டார தலைவர்கள் காமராஜ், வெங்கடாஜலம், மணி, ஜனகராஜ், மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வேடியப்பன் நன்றி கூறினார். வரவேற்றார். விழாவையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பா.ம.க.-த.மா.கா.

தர்மபுரி மாவட்ட பா.ம.க. சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கட்சியின் அவைத்தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன், மாநில துணைத்தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில், முன்னாள் எம்.பி. பாரிமோகன். மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், பசுமைத்தாயக மாநில துணை செயலாளர் மாது, மாவட்டத்தலைவர் செல்வகுமார், மாவட்ட துணை செயலாளர் டி.ஜி.மணி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், நாகராஜன், நகர செயலாளர்கள் சத்தியமூர்த்தி, வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மேற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் மாவட்ட தலைவர் புகழ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் மாநில நிர்வாகி பூபேஷ், மாவட்ட துணை தலைவர் வளையாபதி, இளைஞரணி மாவட்ட தலைவர் கிஷோர், மகளிரணி மாவட்ட தலைவி கலையரசி, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பாபு, மாவட்ட மீனவரணி தலைவர் ரமேஷ், மாவட்ட எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு தலைவர் வேல்முருகன், மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் மகாலிங்கம், வட்டாரத் தலைவர்கள் தனசேகரன், பெரியண்ணன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம்

இதேபோன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி தலைமை அலுவலக பணிமனை முன்பு ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் தொழிலாளர்கள் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவையொட்டி தொழிலாளர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் அமைப்பு செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் கிருபாகரன், பழனி, பாழன், சக்திவேல், இலியாஸ், துரை, சுரேஸ், சத்தியமூர்த்தி, எல்லப்பன், ராஜாங்கம், லட்சுமணன், வெங்கடாசலபதி, துரை, பிரவின்குமார், செந்தில், மாதேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரிமங்கலம்

காரிமங்கலம் நகர காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா காரிமங்கலத்தில் மொரப்பூர் சாலையில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி காமராஜர் சிலைக்கு பேரூராட்சி தலைவர் மனோகரன், துணை தலைவர் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர செயலாளர் சதீஷ்குமார், நிர்வாகிகள் வடிவேல், சஞ்சீவன், ஜெயபால், நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மொரப்பூர்

மொரப்பூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா மொரப்பூர் பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பொன்.பிரகாசம் தலைமையில் நிர்வாகிகள் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் அருணாசலம், முத்து, ஜெயந்தி மணி, சின்னத்தம்பி, நாகேந்திரன், சதானந்தம், முருகன், கைலாசம், சதானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story