தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் விழா


தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் விழா
x

கீழ்விஷாரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் குளத்துமேட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72-வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். நகர தலைவர் அப்துல் சுக்கூர், சிறுபான்மைத் துறை மாவட்ட தலைவர் கே.ஓ.நிஷாத் அகமத், மாவட்ட துணைத் தலைவர் அமானுல்லா பாகவி, ஆற்காடு வட்டார தலைவர்கள் எஸ்.எம்.வீரப்பா புஷ்பராஜ், ஆற்காடு நகர தலைவர் பியாரேஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைத்தலைவர் விநாயகம் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் முகமது அமீனுல்லா ஆயிலம், ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதி விஜயகுமார், மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் தருண்குமார், ராணிப்பேட்டை தொகுதி ஊடகத்துறை பொறுப்பாளர் முகமது ஷகிப் பயாஸ் ஷெரிப், ரேணு, மோகன், பிச்சாண்டி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story