விக்கிரவாண்டி அருகே100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு பிரியாணி விருந்துஊராட்சி மன்ற தலைவர் அசத்தல்
விக்கிரவாண்டி அருகே 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு பிரியாணி விருந்து வைத்து ஊராட்சி மன்ற தலைவர் அசத்தியுள்ளார்.
விழுப்புரம்
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆசூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் ஞானசேகரன். இவர் தனது ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், கிராம முன்னேற்றத்துக்காகவும் அங்குள்ள அய்யனாரப்பன் கோவிலில் கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதில் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் இது போன்று பயனாளிகளுக்கு விருந்து வைத்தது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிலம்பரசன், சிவகாமி முருகவேல், ஆனந்தி ஜான்பாஸ்கோ, புஷ்பா பிரேம்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story