பிரியாணி கடைக்காரர் தற்கொலை
பிரியாணி கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
திருச்சி உறையூர் ராமலிங்கநகர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் விஜய்(வயது 38). இவர் அதே பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டில் விஜய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த உறையூர் போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், வியாபாரத்துக்காக விஜய் கடன் வாங்கி இருந்ததும், கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடையை நடத்த முடியாமல் போனதால், வாங்கிய கடனையும் அவரால் திருப்பி செலுத்த முடியாததும், அதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.