பிரியாணி கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


பிரியாணி கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x

சாயர்புரத்தில் பிரியாணி கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள செல்வமணி நகரை சேர்ந்தவர் மாசானமுத்து மகன் வேல்முருகன் (வயது 38). இவர் சாயர்புரம் பொறியியல் கல்லூரி அருகே பிரியாணி கடை நடத்தி வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த வேல்முருகன் சம்பவத்தன்று தனது கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அவருடைய மனைவி பத்திரகாளி, சாயர்புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.


Next Story