மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி சாம்பியன்

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில்  பெண்கள் பிரிவில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி சாம்பியன்
x

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்கள் பிரிவில் வத்தலக்குண்டு அணி முதலிடம் பிடித்தது.

திருச்சி

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்கள் பிரிவில் வத்தலக்குண்டு அணி முதலிடம் பிடித்தது.

கூைடப்பந்து போட்டி

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் திருச்சி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் திருச்சி மண்டல அளவிலான சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி ஜமால்முகமது கல்லூரி மைதானத்தில் கடந்த 4 நாட்களாக நடந்தது. போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆண்கள் பிரிவில் 66 அணிகளும், பெண்கள் பிரிவில் 18 அணிகளும் பங்கேற்றன.

இதில் பெண்கள் பிரிவில் இறுதி போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, பாய்லர் பிளான்ட் கிளப் அணியும் விளையாடின. இதில் பிஷப்ஹீபா் கல்லூரி 75-56 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆண்கள் பிரிவு

இதுபோல் ஆண்கள் பிரிவில் வத்தலக்குண்டு யங்ஸ்டார் அணியும், கும்பகோணம் கிளப் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் வத்தலக்குண்டு அணி 69-51 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார். இதில் திருச்சி மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் தாமஸ் ஞானராஜ், செயலாளர் கண்ணன், பொருளாளர் முத்துக்குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story