தேயிலை தோட்டத்தில் முகாமிடும் காட்டெருமைகள்


தேயிலை தோட்டத்தில் முகாமிடும் காட்டெருமைகள்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் முகாமிடும் காட்டெருமைகளால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறை பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அவ்வப்போது வெயிலும் அடித்து வருகிறது. இதனால் தேயிலை தோட்ட பகுதிகளில் வளர்ந்து உள்ள புற்களை மேய்வதற்கு வனப்பகுதியில் இருந்து காட்டெருமைகள் முகாமிட்டு வருகின்றன. அவ்வாறு உலா வரும் காட்டெருமைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளில் அமைத்து உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து வருகிறது. தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் காட்டெருமைகள், தொழிலாளர்களை தாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, தோட்டங்களுக்கு அருகில் காட்டெருமைகள் வரும் போது, அவை அங்கிருந்து செல்லும் வரை தொழிலாளர்கள் விரட்டவோ அல்லது அருகில் செல்லவோ வேண்டாம். தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story