ஊருக்குள் உலா வரும் காட்டெருமைகள்


ஊருக்குள் உலா வரும் காட்டெருமைகள்
x

ஊருக்குள் உலா வரும் காட்டெருமைகள்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேயிலை தோட்டங்கள், புல்வெளிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன. இதையொட்டி கோத்தகிரி நகர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் புல்வெளிகளில் காட்டெருமைகள் புகுந்து, மேய்ச்சலில் ஈடுபடுவதை காண முடிகிறது. காந்தி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே ஊருக்குள் உலா வரும் காட்டெருமைகளை விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.Next Story