பா.ஜ.க. ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தி வருகிற 14-ந்தேதி மறியல்


பா.ஜ.க. ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தி வருகிற 14-ந்தேதி மறியல்
x

பா.ஜ.க. ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தி வருகிற 14-ந்தேதி மறியல் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர குழு கூட்டம் நகர குழு உறுப்பினர் ரங்கராஜ் தலைமையில் நடந்தது. கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன் தலைமை தாங்கி இன்றைய அரசியல் நிலை குறித்து சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் வாக்குறுதி அளித்தபடி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ.க. ஆரசு ஆட்சியை விட்டு வெளியேறு என்ற முழக்கத்தோடு வருகிற 14-ந்தேதி அன்னவாசல் தபால் அலுவலகத்தின் முன்பு கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் மீராமொய்தீன் தலைமையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோரை பங்கேற்க செய்வது. அன்னவாசல் பேரூராட்சி கோல்டன் நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் குப்பை கிடங்கை நகரத்திற்கு வெளியில் இடம் மாற்றம் செய்ய வேண்டும். வர்த்தகர்கள், பொதுமக்கள், குழந்தைகளுக்கு மிகுந்த அச்சத்தை தருகின்ற நாய்களையும், குரங்குகளையும் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். அன்னவாசல் அரசு பொது மருத்துவமனையில் இருந்து எடுத்து சென்ற எக்ஸ்ரே மிஷினை மீண்டும் கொண்டு வந்து இயக்க வேண்டும். இலுப்பூரில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி அன்னவாசல் வழியாக கீரனூருக்கு நகர பஸ் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் நாகராஜ், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story