பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 51 பேர் கைது
பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 51 பேர் கைது
சோலார்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புகைப்படத்தை 10 தலை கொண்ட ராவணன் போல் சித்தரித்து கேலி சித்திரம் சமூக வலைதளங்களில் பா.ஜ.க.வினர் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஈரோடு மூலப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், பா.ஜ.க.வை கண்டித்து கோஷம் எழுப்பியபடி பச்சைப்பாளியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு வந்த ஈரோடு தாலுகா போலீசார் ஊர்வலத்தில் பங்கேற்ற 51 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.