கரூரில் தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற பா.ஜ.க.வினர் கைது


கரூரில் தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற பா.ஜ.க.வினர் கைது
x

கரூரில் தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர்,

அனுமதி மறுப்பு

பா.ஜ.க. அரசின் 8 ஆண்டுகள் சாதனையை விளக்கும் வகையில் பா.ஜ.க இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பேரணி கரூர் வெண்ணைமலையில் இருந்து புறப்பட்டு வெங்கமேடு வழியாக கரூர் பஸ் நிலையம் வழியாக சென்று அதன் கட்சி அலுவலகத்தை அடையும் என பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வெண்ணைமலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு பா.ஜ.க. நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களுடன் திரண்டிருந்தனர்.

இதையடுத்து அங்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். மேலும், அங்கு இரும்பு தடுப்புகள் அமைத்து பா.ஜ.க.வினர் பேரணி செல்வதற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர்.

பேரணியாக செல்ல முயற்சி

இருப்பினும் அங்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் ராஜேஷ்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் தீனசேனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் அங்கு திரண்டு இரும்பு தடுப்புகளை தாண்டி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போலீசார் கயிறு கட்டி அவர்களை தடுத்து நிறுத்தி அனுமதி இல்லை எனக்கூறி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இருப்பினும் சிலர் அப்பகுதியில் உள்ள மண் சாலை வழியாக தங்களது வாகனங்களை திருப்பிக்கொண்டு பேரணியாக பல்வேறு பகுதி வழியாக சென்று கரூர் பஸ் நிலையம் பகுதி வழியாக வந்து கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த பகுதிகளில் நின்று கொண்டிருந்த போலீசார் பேரணியாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

கைது

போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வெண்ணைமலையில் இருந்து தடையை மீறி பேரணியாக செல்ல பா.ஜ.க. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைைமயில் பா.ஜ.க.வினர் புறப்பட்டனர். இதையடுத்து தடையை மீறி பேரணியாக செல்ல முயன்றதாக செந்தில்நாதன் உள்பட பலரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்கள் அனைவரும் வெங்கமேட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story