பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி தொடரும்


பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி தொடரும்
x

பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி தொடரும்

தஞ்சாவூர்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி ெதாடரும் என்று, கும்பகோணத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

கும்பகோணத்தில் பா.ஜனதா சக்தி கேந்திரா நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா சிறப்பான வெற்றி பெற வேண்டும். இதற்காக தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பூத் அளவில் இருக்கக்கூடிய பா.ஜனதா உறுப்பினர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இதற்காக பூத் அளவிலான உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் சக்தி கேந்திரா ஆலோசனை கூட்டம் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று(அதாவது நேற்று) சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சக்தி கேந்திரா நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி் தொடரும்

இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இது பா.ஜனதாவின் வெற்றிக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி தொடரும். பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. இடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இது எந்த வகையிலும் கூட்டணியை பாதிக்காது. தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் வலுவாக இருக்கும்.

தேர்தலை பொறுத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும் அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற வேண்டும் என நினைப்பது இயற்கை. இதில் எந்த தவறும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வரதராஜன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாநகரத் தலைவர்கள் பொன்ராஜ், வாசன் வெங்கட்ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story