எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகை
எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
எட்டயபுரம் பகுதியில் சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து எட்டயபுரம் ஒன்றிய பா.ஜனதா சார்பில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் ராம்கி தலைமை தாங்கினார். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எட்டயபுரம் பகுதிகளுக்கு ஒரு வார காலத்துக்குள் சீராக குடிநீர் வழங்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story