பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா
சோளிங்கரில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையத்தில் நகர பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சோளிங்கர் நகர தலைவர் வழக்கறிஞர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். வழக்கறிஞர் அணி மாவட்ட துணை தலைவர் வினோத்குமார், மத்திய அரசு தொடர்புத் துறை தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். .இதனை தொடர்ந்து அப்பன்காரன் குளக்கரையில் 73 மரக்கன்றுகள் நடப்பட்டது.
நகர பொதுச் செயலாளர்கள் பெருமாள், கார்த்தி, மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் குமார், மகளிர் அணி சோனியா, தகவல் தொடர்பு துறை சசிதர், அரசு தொடர்பு துறை வழக்கறிஞர் குருநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யுவராஜ், விவசாய அணி துணைத் தலைவர் துளசிராமன், நகர துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, மகளிர் அணி லோகேஸ்வரி, முன்னாள் ராணுவ வீரர் மணிமாறன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சோளிங்கர் நகர பொருளாளர் சுமங்கலி நன்றி கூறினார்.