பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது-அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி


பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது-அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

திருவண்ணாமலை

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

கோடை விழா

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஜவ்வாதுமலையில் சுற்றுலாத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு கோடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்க உள்ளது. இதனை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.விழாவை முன்னிட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்.

பின்னர் அவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதை ஈசான்ய லிங்கம் கோவில் அருகில் உள்ள யாத்திரி நிவாஸ் மற்றும் போளூர் சாலையில் தமிழ்நாடு ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

யாத்திரிநிவாஸ் அறைகளை பார்வையிட்ட அவர் அனைத்து அறைகளும் தூய்மையாக இருக்க வேண்டும். விடுதியில் அறை எடுத்து தங்கும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் முழுமையாக செய்து தர வேண்டும் என்றார்.

தொடர்ந்து ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தவரிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

தலைவாழை இலை

தொடர்ந்து பணியாளர்களிடம் உணவு அருந்தவரும் வாடிக்கையாளர்களுக்கு தலை வாழை இலையில் தான் உணவு பரிமாற வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

ஜமுனாமரத்தூர் ஜவ்வாது மலையில் 20 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஒரு ஆண்டிற்குள் அப்பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமலாக்கத்துறை சோதனை

தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்து கேட்டபோது.'' மத்திய அரசு தவறு செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் தி.மு.க.உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பயமுறுத்தி பார்க்கின்றது. விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஒன்று அல்லது 2 இடங்களை பிடிக்க முயற்சி செய்கின்றனர். 40 இடங்களில் ஒரு இடத்தை கூட பா.ஜ.க.வால் பிடிக்க முடியாது'' என்றார்.


Next Story