பா.ஜ.க. சார்பில் தூய்மை பணி


பா.ஜ.க. சார்பில் தூய்மை பணி
x
தினத்தந்தி 3 Oct 2023 1:15 AM IST (Updated: 3 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் பா.ஜ.க. சார்பில் தூய்மை பணி நடந்தது.

திண்டுக்கல்

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில், ஒரு மணி நேரம் தூய்மை பணி மேற்கொள்ளும்படி பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்தார். அதன்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில்,திண்டுக்கல் மாநகராட்சி 9-வது வார்டு பகுதியில் பா.ஜ.க.வினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் சுப்பாபிள்ளை சந்து, கிருஷ்ணசாமி நாயுடு தெரு, பிச்சால் நாயுடு சந்து உள்ளிட்ட பகுதிகளில் கிளை தலைவர் செல்வபாண்டி தலைமையில் துடைப்பம், மண்வெட்டி ஆகியவற்றை கொண்டு தூய்மை பணி செய்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், வடக்கு மண்டல தலைவர் சதீஷ், மத்திய அரசு நலன்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைரவன், சிந்தனையாளர் பிரிவு தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் வீரராஜ், வடக்கு மண்டல செயலாளர் ரமேஷ், கிளை செயலாளர்கள் தங்கராஜ், ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story