ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் போலீசில் புகார்


ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் போலீசில் புகார்
x

ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. செயலாளர் சுந்தரவேல் தலைமையில் அந்த கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் ஒருவர் கூட உயிருடன் நடமாட முடியாது என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சட்ட ஒழுங்கிற்கு கேடு விளைவித்து இருக்கிறார். எனவே அவர் மீது வழக்குப்பதிந்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

1 More update

Next Story