பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

ஆழ்வார்குறிச்சியில் பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

கடையம்:

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழ ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசா‌மி (வயது 50). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். மேலும் இவர் கடந்த 23 ஆண்டுகளாக மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி ராமசாமி ஆழ்வார்குறிச்சியை அடுத்த கருத்தபிள்ளையூர் என்ற கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி லயனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பி, ராமசாமி மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட ராமசாமி படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

இந்த விபத்து நடந்து ஒரு மாதம் கடந்த நிலையில் அவருக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், ராமசாமிக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவசேனா மாநில அமைப்பாளர் தங்கமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் அருள்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கார்த்திகேயன், ஆழ்வார்குறிச்சி நகர தலைவர் சுரேஷ் மற்றும் ஒன்றிய தலைவர்கள் உள்பட கடையம், முக்கூடல், கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story