விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
சோளிங்கரில் விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து சோளிங்கர் நகர பா.ஜ.க. சார்பில் சோளிங்கர் பஸ்நிலையம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சோளிங்கர் நகர தலைவர் வழக்கறிஞர் சேகர் தலைமை வகித்தார். தேசிய பிறமொழி மாநில செயலாளர் பி.என்.சீனிவாசன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் வழக்கறிஞர் வேலு, பொதுச்செயலாளர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் தேவராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்க தவறிய தி.மு.க. அரசை கண்டிக்கிறோம், தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 ஆயிரம் வழங்காததை கண்டித்தும், மணல் கல்குவாரிகள் கனிம வளம் கொள்ளையடிக்கப் படுவதாகவும், தக்காளி, வெங்காயம், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் நகர துணைத் தலைவர் தயாளன், கோமதி சீனிவாசன், வரதராஜு, மணிமாறன், குட்டி செல்வம், ஸ்ரீதர், கவிஞர் ஞானம், முத்து, பாண்டியன், பாலசுப்பிரமணியம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொதுச்செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.