ராதாபுரம் மறவன்பத்து குளத்தின் மதகுகளை சீரமைக்க பா.ஜனதா கோரிக்கை
ராதாபுரம் மறவன்பத்து குளத்தின் மதகுகளை சீரமைக்க பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி
ராதாபுரம்:
பாரதிய ஜனதா கட்சியின் ராதாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், வடக்கன்குளம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் ஜெயலட்சுமியிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், "மறவன்பத்து குளத்தின் மதகு மற்றும் மறுகால் பகுதிகள் உடைந்து இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் சேகரிக்க முடியாமல் விரைவில் வறண்டு விடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே குளத்தின் மதகு மற்றும் மறுகால் பகுதிகளை சீரமைக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story