பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி
இந்துக்களை அவ மரியாதையாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர்கள் முத்துக்குமார், முத்துலட்சுமி, பால சீனிவாசன், பால்ராஜ், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ஊடகப்பிரிவு செந்தூர்பாண்டியன், சுரண்டை அய்யாசாமி, தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி, நகர பொதுச்செயலாளர் யோகா சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story