பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் பா.ஜ.க. சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. விவசாய அணி சார்பில் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரும்பு, வெல்லம், தேங்காய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாநில விவசாய அணி நிர்வாகிகள் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் அழகர்சாமி, மேற்கு மாவட்ட தலைவர் மகேஸ்வரன், மாநில நிர்வாகி வெற்றிவேல் கஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கரும்பு மற்றும் தென்னை விவசாயிகள் பொங்கல் தொகுப்பிற்கு தமிழக அரசு வாங்கும் என நினைத்து கரும்பு, வெல்லம், தேங்காய் இருப்பு வைத்துள்ளனர். இந்தநிலையில் தற்போது தமிழக அரசு ரூ.1,000் மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் பொதுமக்களின் நலனை முன்னிட்டும் இதற்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.