பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் ஒருங்கிணைந்த பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் கலாவதி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியன், வடக்கு மாவட்ட தலைவர் சி.ஏழுமலை, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரமேஷ், சதீஷ், முருகன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் விஜயன், தருமன், நேரு, மாவட்ட பொருளாளர் எஸ்.பி.கே. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கள்ளச்சாராயத்தை தடை செய்ய இயலாத தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் அறவாழி, மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் மலர்விழி, மகளிர் அணி பார்வையாளர் சோபனாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story