பா.ஜ.க. பிரமுகரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க. பிரமுகரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

கொரடாச்சேரியில் பா.ஜ.க. பிரமுகரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்

கொரடாச்சேரி:

கொரடாச்சேரியில் கோவில் கிடா வெட்டு கறி விருந்து சாப்பாடு வினியோகத்தில் ஏற்பட்ட தகராறில் பா.ஜ.க. பிரமுகர் காமராஜர் தாக்கப்பட்டார். இதுகுறித்து இருதரப்பினர் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பா.ஜ.க. பிரமுகரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொரடாச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசினார். மாநில விவசாய அணி செயலாளர் கோவி.சந்துரு, மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், மாவட்ட செயலாளர் செந்திலரசன், செல்வம், மாவட்ட துணைத் தலைவர் சதாசதீஷ், ஒன்றிய தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னிட்டு கொரடாச்சேரியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


Next Story