பா.ஜ.க. டிஜிட்டல் பேனர் அகற்றம்


பா.ஜ.க. டிஜிட்டல் பேனர் அகற்றம்
x

பா.ஜ.க. டிஜிட்டல் பேனர் அகற்றப்பட்டது.

தென்காசி

கடையம்:

கடையம் யூனியன் கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து மேட்டூர் ெரயில்வே கேட்டின் மேற்கு பகுதியில் உள்ள பகுதிகளுக்கு மேட்டூர் என்பதற்கு பதிலாக வெய்க்காலிப்பட்டி என பஞ்சாயத்து நிர்வாகம் பெயர் மாற்றி ரசீது வழங்குவதாக கூறி, மேட்டூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து இரு கிராம எல்லை பிரச்சினையில் சுமுக தீர்வு காணுமாறு தென்காசி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் மேட்டூர் ெரயில்வே கேட்டின் மேற்கு பகுதியில் கடையம் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலில் உள்ள டிஜிட்டல் பேனரில் வெய்க்காலிப்பட்டி என்று எழுதப்பட்டு இருந்தது. இதனை அறிந்த வருவாய் துறையினர், போலீசார் அறிவுறுத்தலின்பேரில், அந்த டிஜிட்டல் பேனர் அகற்றப்பட்டது.


Next Story