பா.ஜ.க. கொடிக்கம்பம் வைப்பதில் தகராறு
கன்னிவாடி அருகே பா.ஜ.க. கொடிக்கம் வைப்பதில் தகராறு ஏற்பட்டது.
திண்டுக்கல்
கன்னிவாடி அருகே உள்ள டி.பண்ணைப்பட்டியில் பா.ஜ.க.வை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கொடிகம்பம் வைக்க நேற்று முயன்றார். இதற்கு அதே பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இருகோஷ்டியினராக அவர்கள் மோதிக்கொண்டனர். பின்னர் அவர்கள் பழனி-செம்பட்டி சாலையில் டி.பண்ணைப்பட்டி பிரிவு என்னுமிடத்தில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருகோஷ்டியினரிடம் யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story