பொள்ளாச்சியில் பா.ஜனதா மாவட்ட மாநாடு- வருகிற 19-ந்தேதி நடக்கிறது


பொள்ளாச்சியில் பா.ஜனதா மாவட்ட மாநாடு-  வருகிற 19-ந்தேதி நடக்கிறது
x

பொள்ளாச்சியில் பா.ஜனதா மாவட்ட மாநாடு வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கோவை ரோடு சேரன் நகரில் வருகிற 19-ந்தேதி தாமரை ஆட்சி என்கிற பெயரில் கோவை தெற்கு மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு பணிகள் தொடங்குவதற்கு பூமிபூஜை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் கலந்துகொண்டு பந்தல் கால் நட்டு பணிகளை தொடங்கிவைத்தார். இதில் மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்திராசலம், மாநில விவசாய அணி துணை தலைவர் குமரேசன், முன்னாள் மாவட்ட தலைவர் பாபா ரமேஷ், மாவட்ட பொருளாளர் ரமேஷ், பொதுச்செயலாளர்கள் துரை, கோவிந்தராஜ், ஆனந்த், துணை தலைவர் தனபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை பல்வேறு கட்டங்களாக பொதுமக்களுக்கு எடுத்து கூறி வருகின்றோம். பொள்ளாச்சியில் நடைபெறும் பிரமாண்ட மாவட்ட மாநாட்டில் ஒரு லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த மாநாடு அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும். இதில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய மந்திரிகள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். தி.மு.க. அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தப்படும் மாநாடாகவும் அமையும். ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக இரு மாவட்ட விவசாயிகள், அதிகாரிகள், பொதுமக்களை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.


Next Story