பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம்


பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம் அங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ஜெயதுரை, முருகன், செயலாளர் மில்.அரி, பொருளாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிப்பணி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கினார்கள். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அனைத்து பூத்களுக்கும் பூத் கமிட்டி அமைத்து தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும். வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஜூன்) 30-ந் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து கிராமங்கள் தோறும் மக்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் சர்தார்சிங், மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட மகளிர் அணி தலைவி தலைமை அலமேலு ஆறுமுகம், நிர்வாகி கிருஷ்ணவேணி உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.


Next Story